Thursday, April 21, 2011

The real Hero "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து" Mr.Sagayam


லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து: ஒரு "ஹீரோ'வின், "ப்ளாஷ்பேக்'
                                     சகாயம் 


                                                        


"ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்...' புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போதே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, "ஹீரோ' மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார். சிறுவனாய் இருந்தபோது முளைத்த, "கலெக்டர் கனவு' நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம். தர்மபுரியில் பயிற்சி கலெக்டர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ., திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர், கோவை கலால் பிரிவு துணை கமிஷனர், சென்னை, டி.ஆர்.ஓ., தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநில தேர்தல் ஆணைய செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட கலெக்டர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர், மதுரை கலெக்டர் என, இவர், "பந்தாடப்பட்ட' விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.

பதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில:

* அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், "தோழனாக' மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.

* காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, "பெப்சி' குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, "சீல்' வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார்.

கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், "சிண்டிகேட்' முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, "செக்' வைத்தார்.

* அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, "ரெய்டு' நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.

தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்' என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, "இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்' என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, "நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்' என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.

நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார்.

இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'

பி . எஸ் . எல் . வி சி - 16 launching


பி . எஸ் . எல் . வி  சி - 16

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாம் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி - சி 16 ராக்கெட் நேற்று காலை சரியாக 10.12 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் பகுதிகள் ஒவ்வொன்றாக பிரிந்து 18வது நிமிடத்தில் 822 கி.மீ., தொலைவில், "ரிசோர்ஸ்சாட்-2' தொலைவுணர்வு செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய - ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவான 92 கிலோ எடை கொண்ட, "யூத்சாட்', சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட 106 கிலோ எடை கொண்ட, "எக்ஸ்சாட்' ஆகிய செயற்கைக்கோள்களும் அவற்றின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இவை வரும் 28ம் தேதி முதல் தம் பணிகளைத் துவங்கும்.முன்னதாக, ராக்கெட்டை செலுத்துவதற்கான ஐம்பத்து நான்கரை மணி நேர, "கவுன்ட் டவுன்' கடந்த 18ம் தேதி அதிகாலை 3.42 மணிக்கு துவங்கியது.

அத்துடன் ராக்கெட்டை செலுத்துவதற்கு ஏதுவான இறுதிக்கட்ட ஆய்வுப் பணிகளையும், திரவ எரிபொருள் நிரப்பும் பணிகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்தனர். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதும் விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அப்போது மத்திய அமைச்சர் நாராயணசாமி, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் ஆகியோர் விஞ்ஞானிகளை நேரில் பாராட்டினர்.







இஸ்ரோ முதன் முதலாக 1993ம் ஆண்டு, "தி போலார் சேட்டிலைட் லாஞ்ச் வெகிகிள்' (பி.எஸ்.எல்.வி.,) எனப்படும் ராக்கெட்டை ஐ.ஆர்.எஸ் - பி 2 என்ற செயற்கைக்கோளுடன் விண்ணுக்கு அனுப்பியது. இது, தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அனுப்பிய அனைத்து பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளும் வெற்றியில் முடிந்துள்ளன.இஸ்ரோ, இதுவரை தொடர்ந்து 17 பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

இது வரை இந்தியாவில் அனுப்பப்பட்ட ராக்கெட்டுகள் 

தேதி செயற்கைக்கோள் முடிவு
1993, செப்., 20 ஐ.ஆர்.எஸ் -பி 2 தோல்வி
1994, அக்., 15 ஐ.ஆர்.எஸ் -பி 2 வெற்றி
1996, மார்ச் 21 ஐ.ஆர்.எஸ் - பி 3 வெற்றி
1997, செப்., 29 ஐ.ஆர்.எஸ் -1 டி வெற்றி
1999, மே 26 ஓசன்சாட்-1, கிட்சாட் - 3, டூப்சாட் வெற்றி
2001, அக்., 22 டி.இ.எஸ்., வெற்றி
2002, செப்., 12 கல்பனா -1 (மெட்சாட்) வெற்றி
2003, அக்., 17 ரிசோர்ஸ்சாட் -1 (ஐ.ஆர்.எஸ் - பி 6) வெற்றி
2005, மே 5 கார்டோசாட் -1, ஹாம்சாட் வெற்றி
2007, ஜன., 10 கார்டோசாட் -2, எஸ்.ஆர்.இ -1, 
லபான் டூப்சாட், பெகியூன்சாட் - 1 வெற்றி
2007, ஏப்., 23 ஏஜைல் வெற்றி
2008, ஜன., 23 டெக்சார் வெற்றி
2008, ஏப்., 28 கார்டோசாட் -2 ஏ, ஐ.எம்.எஸ் -
1, எட்டு நானோசெயற்கைக்கோள்கள் வெற்றி
2008, அக்., 22 சந்திரயான் - 1 வெற்றி
2009, ஏப்., 20 ரிசாட்-2, அனுசாட் வெற்றி
2009, செப்., 23 ஓசன்சாட் - 2, ஆறு நானோ 
செயற்கைக்கோள்கள் வெற்றி
2010, ஜூலை 12 கார்டோசாட் -2 பி, அல்சாட் -2 ஏ, 
என்.எல்.எஸ்., 6.1, ஸ்டுட்சாட் வெற்றி
2011, ஏப்., 20 ரிசோர்ஸ்சாட் - 2, 
யூத்சாட், எக்ஸ் சாட் வெற்றி

Wednesday, December 29, 2010

பார்வை இல்லாதவர்களுக்கு ஒரு நல்லது பண்ணி இருக்காங்க கொஞ்சம் படிங்


பார்வை இல்லாதவர்களுக்கு ஒரு நல்லது பண்ணி இருக்காங்க கொஞ்சம் படிங் 





The Thimble concept for iPhone
The Thimble is a Braille finger glove multimedia concept from designer Erik Hedberg and Zach Bennet. The finger glove utilize iPhone integration via Bluetooth that pipes the connection to the internet that could deliver news and current locations all translated to the blind user using Braille messages. There's also an optical scanner at the glove fingertip that could read the paper text and translate it into Braille message. Know how the concept works after the break.

We find the concept really great, however we're looking of same concept via a Bluetooth headset instead of translating everything via Braille, it's much easy for them to recognize voice translation.

Thursday, December 2, 2010

4G Technology


4G Technology 

3 G யோட நிலைமையே நம்ம நாட்டுல சரி இல்லை , இது எப்ப வர போகுதுன்னு தெரியல பா,,, இத பத்தி கொஞ்சம் தெரிஞ்சுகோங்க .....
Fourth Generation (4G) mobiles

4G also called as Fourth-Generation Communications System, is a term used to describe the next step in wireless communications. A 4G system can provide a comprehensive IP solution where voice, data and streamed multimedia can be provided to users on an "Anytime, Anywhere" basis. The data transfer rates are also much higher than previous generations.

The main objectives of 4G are:

1)4G will be a fully IP-based integrated system.

2)This will be capable of providing 100 Mbit/s and 1 Gbit/s speeds both indoors and outdoors.

3)It can provide premium quality and high security.

4)4G offer all types of services at an affordable cost.


4G is developed to provide high quality of service (QoS) and rate requirements set by forthcoming applications such as wireless broadband access, Multimedia Messaging, Video Chat, Mobile TV, High definition TV content, DVB, minimal service like voice and data, and other streaming services.

4G technology allow high-quality smooth video transmission. It will enable fast downloading of full-length songs or music pieces in real time.

Tuesday, November 30, 2010

தேன் கூடு பார்த்து உல்டா பண்ணிட்டாங்க

Biomimicry Creates New Tires 


new tiresBiomimicry is the science that imitates nature to create new products.

Resilient Technologies, a Wisconsin based company, has created a tire that can't go flat.
Instead of using a pressurized air cavity, the tire design relies on a geometric pattern of six-sided cells that are arranged in a matrix like a honeycomb.
It has the same ride, reduced noise levels and heat generation as pressurized tires. The goal was to create an airless tire with uniform flexibility and load transfer that would endure tremendous wear and tear and still perform well.
The best design was found in nature, which was the honeycomb.
 

காற்றாடி

Wind Turbines

wind turbines
The Bahrain World Trade Center is the first skyscraper to have wind turbines integrated into the structure of the building.

Three large wind turbines are suspended between two office towers. The towers are aerodynamically tapered to funnel wind and draw air into the turbines.latest invention
This airfoil tapering allows the wind to enter the turbines at a perpendicular angle and increases air speed as much as 30 percent in each of the 95 ft wide turbine rotors.
The turbines supply about 15 percent of the electricity used by the skyscraper - approximately the same amount of electricity used by 300 homes.